இந்தோனேசியாவில் கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358 மருத்துவர்கள் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள். இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுப் பாதிப்பு அந்நாட்டில் பரவிய பிறகு ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். தொற்றுப் பாதிப்பு 14.6 சதவீதத்தை அந்நாட்டில் எட்டியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஒக்சிஜன் தடுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், இந்தோனேசியாவில் மருத்துவர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து 401 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சினோவேக் தடுப்பூசிதான் அந்நாட்டில் அதிகம் போடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358 மருத்துவர்கள் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள்.
இந்தோனேசியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் சினோவேக் தடுப்பூசியே போடப்பட்டுள்ளது. திரிபு கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன், பிற தடுப்பூசிகளை காட்டிலும் மிகவும் குறைவு என நம்பப்படுகிறது.
————-
Reported by : Sisil.L