3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு குடித்துத்தள்ளிய மதுப்பிரியர்கள்

இலங்கையில் 3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரைவாசிக்கும் குறைவான மதுபான விற்பனை நிலையங் களைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்  70 கோடி ரூபாவுக்கு விற்பனை இடம்பெற்றுள்ளது என மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கடந்த திங்கட்கிழைமை பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் இவ்வாறு மது விற்பனை இடம்பெற்றுள்ளது என குறித்த திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 200 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ள போதிலும் கடந்த 21 மற்றும் 22, 23ஆம் திகதிகளில் 1409 மதுபான விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.


பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நாளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மதுப் பிரியர்கள் அதிகளவில் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *