கொவிட்-19 தொற்று நோய் நிலைமை காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளை அடுத்த வாரமும் மாகாணங்களுக்கு இடையே அனுமதிக்க முடியாது என்று கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணி அறிவித்துள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதன்படி, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மட்டுமே தொடர்ந்து இயங்கும் என்றுஅவர் குறிப்பிட்டார்.
நேற்று(26) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
——————–
Reported by : Sisil.L