இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான சங்குகள் சிக்கின

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குக் கடத்தப் படவிருந்த 33 ஆயிரத்து 680 சங்குகள் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி புத்தளம் பகுதியில் வைத்து ஒரு தனியார் நிறுவனத்தினால் சங்குகளின் பங்குகளை கொள்கலன்களில் அடைத்து இந்தியா வுக்கு ஏற்றுமதி செய்யப் போவதாக புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்குத் தடை செய்யப்பட்ட சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தால் ஏற்றுமதி உரிமத்தின் அதிகாரத்தின் கீழ் தவிர சங்கு ஓடுகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், 70 மில்லி மீற்றருக்கும் குறைவான விட்டம் கொண்ட சங்கு ஓடுகளை வைத்திருத்தல், வாங்குவது, காட்சிப்படுத்தல், விற்பனை செய்தல், போக்குவரத்து அல்லது ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட விடயங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட் டுள்ளன.


எனவே, சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளில் 21 ஆயிரத்து 480 பங்குகள் 70 மில்லி மீற்றருக்கும் குறைவான விட்டம் கொண்டவை என்று சோதனையில் கண்டறியப் பட்டுள்ளது.


இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சுங்கத் திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம் பரிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.     

———————-   
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *