இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் முக்கிய பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் விரிவான பேச்சுகளை நேற்று திங்கட்கிழமை நடத்தினார் என பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்றிரவு தெரிவித்தது.


இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் சந்திப்
பாக இது இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் தொடர்பில்  இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பாக இந்தியத் தரப்பிலிருந்து அண்மைக்காலத்தில் அதிகளவுக்கு கரிசனை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பது முக்கியமானதாகும்.


“இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுகள் சிறப்பானதாக அமைந்திருந்தன. இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன் போது நாம் ஆராய்ந்தோம். பிராந்திய உறவுகள் குறித்தும் பேசினோம். நாம் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பில் இருப்போம்” என இந்தப் பேச்சுகள் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிவு
செய்துள்ளார்.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *