கண்டாவளையில் 18 பேர் உட்பட வடக்கில் நேற்று 45 தொற்றாளர்

யாழ்ப்பாணத்தில் 22 பேரும், கிளிநொச்சி கண்டாவளையில் 18 பேரும் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 45 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களின் பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விவரம் வெளியானது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று 293 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் வேலணை மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 4 பேருக்கும், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த
3 பேருக்குமாக 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 444 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 38 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, கிளிநொச்சி கண்டாவளை மருத்துவ அதிகாரி பிரிவில் 18 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேபோன்று, சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்குமாக 15 பேருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


ஒட்டுசுட்டான் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *