பயணக் கட்டுப்பாடுகளை 21ஆம் திகதி நீக்க வேண்டாம்- ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடிதம்

போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை 21ஆம் திகதி நீக்க வேண்டாம் எனக் கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

மிகவும் முக்கியமான இந்தத் தருணத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீக்குவது கூட ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட நிலைமையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக காணப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் கிடைத்த பலாபலன்களை இழக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *