அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.
சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாள ராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும்.
———————————–
Reported by : Sisil.L