யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 67 வயதுடைய ஆர்.கனகம்மா என்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————-
Reported by : Sisil.L