எதிர்வரும் 21ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்க முன் சமூகத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலைக் கண்டறிய தொடர்ச்சியான துரித அன்டிபொடி சோதனைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.துரித அன்டிபொடி சோதனைகளை அதிகரிக்க உள்ளூர் சுகாதார திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன கூறினார்.
நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை குறித்து இச்சோதனைகள் மூலம் அறியலாம் எனவும் அவர் கூறினார்.
எனினும் தினசரி பிசிஆர் சோதனைகள் அதே வழியில் செய்யப்படுகின்றன என்றார்.
Reported by : Sisil.L