அநாதை இல்லத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு கொவிட் தொற்று

அநாதை இல்லமொன்றில் 12 சிறுவர்கள் மற்றும் 3 பணியாளர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பத்தேக சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

 
அக்குரஸ்ஸ பிரதேச பணியாளர் ஒருவர் அண்மையில் தொற்றுக்காளானார். அதன்பின் அவருடன் தொடர்புடைய  2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஊழியர்கள் சிறார்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களும் தொற்றுக்காளாகியுள்ளனர்.


இதன்படி கடந்த 12ஆம் திகதி சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிவுகள் வெளியான நிலையில் அதில் 12 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

 
இந்த அநாதை இல்லத்தில் 65 சிறுவர்களும் 15 பணியாளர்களும் உள்ளதாக பத்தேகம சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *