யாழ்.போதனா வைத்தியசாலையிகொரோனாவால் நேற்று ஐவர் பலி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் நேற்று இரவு 9 மணி வரையான 24 மணி நேரத்தில்  உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயது ஆண், புத்தூரைச் சேர்ந்த 48 வயது ஆண், பலாலியைச்  சேர்ந்த 59 வயது ஆண், கோப்பாயைச் சேர்ந்த 51 வயது பெண் என நால்வர் உயிரிழந்தனர்.திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.


இதன்படி யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.        
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *