இலங்கை சுங்கம் கடந்த வருடம் அதிகமான வருமானத்தைப் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டில் இலங்கை சுங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 970 பில்லியன் ரூபாவாகும்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் இது 138 சதவீத வருமான வளர்ச்சியாக பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு இலங்கை சுங்கம் 923 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by:S.Kumara