கட்டுப்படுத்தப்பட்ட 75 மருந்துகளின் விலை நாளை வெள்ளிக்கிழமைக்குள் அதிகரிக்கப்படும் என தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதாவது 5% விலை உயர்வு. எவ்வாறாயினும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக மருந்துகளின் விலையை 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களின் கைத்தொழில் சபை நேற்று (9ஆம் திகதி) மருந்து மற்றும் உற்பத்தி இராஜாங்க அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி காரணமாக மருந்துகளின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை, மருந்துப் பொருட்கள் விநியோக மற்றும் உற்பத்தி இராஜாங்க அமைச்சுக்கு நேற்று (9ஆம் திகதி) அறிவித்திருந்தது.
மருந்து இறக்குமதியாளர்களின் கைத்தொழில் சபையின் பிரதிநிதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மருந்துகளின் விலையை அதிகரிப்பதற்கான பிரேரணையை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அனுப்பி பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி அடுத்த வாரத்துக்குள் தீர்வு வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் இன்று (10ஆம் திகதி) முதல் ஆரம்பிக்கப்படும் என மருந்து இறக்குமதியாளர்கள் சபை தெரிவித்துள்ளது.
————
Reported by : Sisil.L