7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்: டிஎன்ஏவில் புதிய மனித மரபணு

இந்தோனேசியாவில் 7,200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் எலும்புகளிலிருந்து, புதிய மனித மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து தெற்கு சுலாவேசி என்ற பகுதியில் 2015ஆம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வுகளின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.அதில், தெற்கு சுலாவேசி பகுதியின் முதல் நாகரிகமாக டோலியன் மக்கள் கருதப்படுகின்றனர். தெற்கு சுலாவேசியில் சுண்ணாம்புக் குகையில் கண்டெடுக்கப்பட்ட 17 அல்லது 18 வயது இளம் பெண்ணின் எலும்புகள் ஒப்பீட்டளவில் சேதமாகாமல் இருந்தன.

குகையில் வேட்டையாடி வாழ்ந்த அப்பெண்ணின் சடலம், வயிற்றுக்குள் குழந்தை படுத்திருப்பது போன்ற நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெண்னை பெஸ்ஸி (Besse) என அழைக்கின்றனர்.பெண்ணின் எலும்புகளிலிருந்து புதிய மனித மரபணு கண்டறியப்பட்டுள்ளது. உலகில் வேறு எந்தப் பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படாத இந்த மனித மரபணு, தனித்துவமானது.


ஈரப்பதமான வெப்ப மண்டல வானிலையில் டிஎன்ஏக்கள் எளிதாக அழுகி விடும். பண்டைய கால மனிதர்களின் டிஎன்ஏவை கண்டுபிடிப்பது அரிதான ஒன்று. எனவேதான், இதை மிகவும் அதிர்ஷ்டமான கண்டுபிடிப்பாக கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.


இது குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த பிறகே தெளிவான முடிவுகள் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், ஆராய்ச்சியாளர்கள் டோலியன் மக்கள் குறித்து ஆராய மேலும் ஒரு புதிய ஆய்வில் களமிறங்கவுள்ளனர். இந்த ஆய்வுக்கு, பெஸ்ஸின் கண்டுபிடிப்புகள் அதன் தனித்துவமான கலாசார வளர்ச்சியைப் பற்றி மேலும் அறிய உதவும் எனக் கூறப்படுகிறது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *