நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி கோத்தபாய நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றால் இறக்கும் பெரும்பாலான மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இந்நடவடிக்கைகள் அவர்களை மரணத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கும்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற தொற்றல்லா நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதிலும் கூடியோருக்கு பிசிஆர் சோதனைகள் செய்யப்படவுள்ளன.
ஜனாதிபதிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. இத்திட்டத்தை செயற்படுத்தவென உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சு சுற்றறிக்கை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
——————-
Reported by : Sisil.L