கொரோனா தொற்றுக்கான மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங் கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் நடமாடும் சேவையின் ஊடாக பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்துமாறு நேற்று ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
————–
Reported by : Sisil.L