6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316 தனி நபர்கள் மீதான தடையை நீக்கிய இலங்கை அரசு!

இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதோடு பல அமைப்புகளையும் அவர்கள் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள்.


இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கை, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்நிலையில், அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழ் அமைப்பு ஆகிய 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.


மேலும் 316 தனி நபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.


வெளிநாடுகளில் வதியும் தமிழ் மக்களிடம் உதவியை எதிர்பார்த்து வெளிநாடு வாழ் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  
——————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *