5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர் கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு; ஜூன் 27 வரை பார்க்கலாம்

18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வான, 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் அற்புத நிகழ்வு ஒன்று தற்போது விண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 
வானில் அவ்வப்போது சில அதிசய நிகழ்வுகள் காணப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், சில அதிசயங்களைக் காணும் போது, நாம் பிரமித்து நிற்பதும் நடப்பதுண்டு. அந்த வரிசையில் தற்போது, 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வானது தற்போது வானில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 அதன்படி, விண்ணில் ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள் அணி வகுத்து நிற்கும் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 
அப்படி, வானில் உள்ள கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் போது, சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசயமும் வானில் நிகழ்கிறது.


அந்த வகையில் தான், தற்போது விண்ணில் உள்ள கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கோள்கள் ஒரே நேர் கோட்டில் அணி வகுக்கும் அதிசய நிகழ்வானது தற்சமயம் வானில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அற்புத நிகழ்வானது தற்போது முதல் வரும் 27 ஆம் திகதி வரையில் வானில் காண முடியும் என்றும், விஞ்ஞானிகள்  கூறியுள்ளனர். குறிப்பாக, “தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், அதன் பின்பாகவும் சூரியனுக்கு மேலே வளைவாக அணி வகுத்திருக்கும் இந்த 5 கோள்களையும் வெறும் கண்களில் நாம் காணலாம்” என்றும், நாசா விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். முக்கியமாக, “கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் இப்படியான ஓர் அதிசய நிகழ்வு தோன்றும்” என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 
அந்த வகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இது போன்ற நிகழ்வு வானில் தோன்றியது. இந்த அற்புத நிகழ்வானது, இனி, வரும் 2040 ஆம் ஆண்டு தான் தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

—————-  

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *