5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு; வெட்டுப்புள்ளிகளும் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ​நேற்று (16) இரவு வெளியிடப்பட்டுள்ளன. 

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சையில் 3,32,949 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, மாவட்டங்கள் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு 145 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்கு 147 புள்ளிகளும், நுவரெலியா கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 144 வெட்டுப்புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், மொனராகலை, மன்னார் மாவட்டங்களுக்கு 143 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரையில் பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்த விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *