42 நாட்கள் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று தளர்வு

இலங்கையில் தொடர்ச்சியாக 42 நாட்கள் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.


தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய தொடர் வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது.
மேலும் புதிய விதிமுறைகளின் படி இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அத்தியாவசியமற்ற பயணத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
——————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *