லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு எரிவாயுக் கப்பல் இன்று (12) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் வி.கேதீஸ்வரம் தெரிவித்துள்ளார்.
ஆய்வுப் பணிகள் முடிவடைந்தவுடன், விநியோகத்திற்காக உடனடியாக எரிவாயு இறக்கும் பணி இன்று பிற்பகலில் ஆரம்பமாகும் என்றார்.
எதிர்காலத்தில் மேலும் பல எரிவாயுக் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
————–
Reported by :Maria.S