நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, நகர்ப்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்களையும் பாதித்துள்ளது.
3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் மே 19 ஆம் திகதி வரவுள்ளதாகவும் லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.
ஓமானில் இருந்து இலங்கைக்கு வரும் இரண்டு கப்பல்களுக்கும் தேவையான பணம் செலுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L