279 அடி உயரத்திலிருந்து விழுந்த யுவதியைக் கண்டுபிடிக்க விஷேட நடவடிக்கைகள்

279 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த யுவதியைத்  தேடுவதற்காக திம்புல-பத்தன பொலிஸார் இன்று காலை முதல் விஷேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.நான்கு இளம் பெண்கள் நேற்று(18) டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்குச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. காணாமல் போனவர் தலவாக்கலை லிந்துலவைச் சேர்ந்த  19 வயதுடைய யுவதியான பவித்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 
காணாமல் போன யுவதியைத் தேடும் நடவடிக்கையில் திம்புல பத்தன பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் ஈடுபட்டுள்ளனர் என பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *