26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரையிலான நிலவரம் ஆகும்.


இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்டத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, “உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது. இங்கிலாந்தில் 190 பேரும், ஸ்பெயினில் 142 பேரும், போர்த்துக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறும்போது, “தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும். வைரஸ் மரபணுவை ஆய்வு செய்து, வாய்ப்புள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதை வரிசைப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
——–

Reported by :Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *