253 மருத்துவ உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்துக்கு நியமனம்

வடக்கு மாகாணத்தின் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறைகளை நீக்கும் பொருட்டு 253 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பில் அவர் நேற்று  அனுப்பி வைத்த செய்திக் குறிப் பில், வட மாகாணத்தில் நீண்ட காலமாக மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளில் மிக மோசமான பற்றாக்குறை காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரு தொகுதி மருத்துவ உத்தி யோகத்தர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நியமனத்தில் வட மாகாணத்திற்கு 253 மருத்துவ உத்தி யோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
இதில், யாழ். போதனா மருத்துவமனைக்கு 62 மருத்துவ  உத்தியோகத்தர்களும், வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளுக்கு 191 மருத்துவ உத்தியோகத்தர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், யாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு  57 பேரும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனைகளுக்கு 28 பேரும், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு 24 பேரும், மன்னார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு 35 பேரும், வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு 47 பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றுள்ளது.  
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *