2024 ஆம் ஆண்டின் வருமானங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய ஆவணமான வரவு செலவுத் திட்ட யோசனை இன்று(13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(13) நண்பகல் 12 மணிக்கு வரவு செலவுத் திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதன் காரணமாக பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதிக்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் முன்னிலையாவது கட்டாயமாகும்.
விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் இருக்கும் வகையில் தங்களின் ஏனைய செயற்பாடுகளை முறைமைப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.
reported by:S.Kumara