20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் தடுப்பூசியான பைசரை பூஸ்டர் டோஸாக வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். “இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் எழுத்து மூலமான வழிகாட்டல்கள் சுற்று நிருபமாக வெளியிடப்பட்ட பின்னரே இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இரு சினோபார்ம் தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கே பூஸ்டர் டோஸ் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த வருடம் ஆரம்பமாகும். முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். அதன் பின்னரே 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப் பூசி வழங்கப்படும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Reported by : Sisil.L