கரவெட்டியில் 2 வயது குழந்தைகள் இருவர், முல்லைத்தீவில் 2 வயது குழந்தை ஒன்றுமாக நேற்று வடக்கு மாகாணத்தில் நேற்று 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.இவ்வாறு அடையாளம் கணப்பட்டவர்களில் 41 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.இதில், யாழ்.போதனா வைத்தியசாலையில் 486 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டது. இதில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர் (06, 12 வயதுடைய சிறுவர்கள், 09 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்)
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், யாழ்.சிறைச்சாலையில் இரண்டு பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர், நொதேர்ன் சென்றல் தனியார் மருத்துவமனையில் ஒருவர் அடங்குவர்.
இதேவேளை முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 வயது ஆண் குழந்தை ஒன்றும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 144 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 17 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
இதில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் (2 வயது குழந்தைகள் இருவர்) உள்ளடங்குவர்.
———————-
Reported by : Sisil.L