மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, இலங்கையில் நான்கு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 1.2 மில்லியன் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உள்ளூர் நிறுவனம் கூறுகிறது.
இந்த வாகனத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பதுடன் 200 சிசி திறன் கொண்டதாகும். இதில் 814 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Reported by : Sisil.L