கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சேவையாற்றி வந்த மருத்துவர் சார்ள்ஸ் கொட்பிரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது 102ஆம் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
வட அமெரிக்காவில் மிக நீண்ட வயது வரையில் மருத்துவ சேவை ஆற்றியவர்களில் ஒருவராக கொட்பிரி அடையாளப்படுத்தப்படுகின்றார்.
1953ஆம் ஆண்டு ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுக்கொண்ட மருத்துவர் கொட்பிரி 102 வயது வரையிலும் சுறுசுறுப்பாக மருத்துவ சேவை வழங்கி வந்தார் என அவரது புதல்வர் மார்க் கொட்பிரி தெரிவிக்கின்றார்.
102 வயது வரையில் றொரன்டோவின் சில மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வாரத்துக்கு நான்கு நாட்கள் சேவை வழங்கி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது ஓய்வு காலத்திலும் மக்களின் நலனுக்காக அரிய சேவைகளை வழங்கியுள்ளதாக பலர் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.
Reported by :Maria.S