1000 அடி நீள ஓவியத்தை உருவாக்கும் செயற்பாடு யாழில் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் 1000 அடியை விட நீளமான ஓவியத்தை வரையும் நடவடிக்கை இன்று(01) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

MTV – MBC ஊடக வலையமைப்பு, நியூஸ்பெஸ்ட் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது.

ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 1000 அடியை விட நீளமான ஓவியம் வரையப்படுகிறது.

ஒன்றாய் எழுந்திடுவோம்என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த செயற்றிட்டத்தின் முதல் நாளான இன்று(01) யாழ்.இந்துக் கல்லூரியில் வர்ணம் தீட்டும் செயற்பாடு ஆரம்பமாகியது

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள், யாழ்.இந்துக் கல்லூரியின் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றிருந்தனர்.

நகருக்குள் நகரும் பிரமாண்டமான வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுவதுடன் இந்தப் பேரணி, நாளை(02) முல்லைத்தீவு மாவட்டத்தை சென்றடையுவுள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *