சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் 100க்குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான திட்டத்தை கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின் அமைச்சு இம்முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறிய அமைச்சர் இம்முடிவு முதல் கட்டமாக கொவிட் தொற்றால் மூடப்பட்ட பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டிய அவசியத்தையும் அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்தையும் கொண்டு எடுக்கப்பட்டது.
இதன்படி 50க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 1439 பாடசாலைகளும் 51-100க்கு இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட 1523 பாடசாலைகளுமாக 2962 பாடசாலைகள் ஜூலையில் மீண்டும் திறக்கப்படும். ஏனைய பாடசாலைகள் விஷேட திட்டத்தின் கீழ் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பாடசாலைகளை மீளத் திறக்க முன் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
—————————-
Reported by : Sisil.L