1 பில்லியன் டொலர் கடன் உதவி : நிதியமைச்சர் இந்தியா பயணமானார்

இலங்கை சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில், இந்தியாவிடம் கடன் உதவி பெற கையெழுத்திடுவதற்காக அந்நாட்டின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று புதுடெல்லிக்கு விஜயம் செய்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லும் பசில் ராஜபக்ஷ மத்திய அரசுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.


மேலும் இந்தப் பயணத்தின்போது நாட்டின் எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு நிதியளிக்க எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பற்றி நிதியமைச்சர் கலந்துரையாடுவார் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.


இலங்கை கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி பெறப்போவதாக இலங்கை ஏற்கனவே அறிவித்திருந்தது.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *