வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முதல் மீளவும் நடைபெறவுள்ளன.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி. ஆர். பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
இதையடுத்து, கடந்த 9ஆம் திகதி தொடக்கம் யாழ். போதனா மருத்துவமனையில் வெளிநாடு செல்வோருக்கான பி. சி. ஆர். சோதனைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
————-
Reported by : Sisil.L