அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் கொவிட்-19 மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று தெரிவித்தார்.
கொவிட் தடுப்பு செயலணி விதித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார்.
களுத்துறை வைத்தியசாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற பின் அவர் ஊடகங்களிடையே உரையாற்றினார்.
இது போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படாவிடின் நாட்டைக் காப்பாற்றுவது கடினம் எனக் கூறிய அவர், இது தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து செயற்படும் என்றார்.
“ஷொப்பிங் மால்களைத் திறக்க வேண்டும் எனக் கூறும் போது திறக்க முடியாது. இந்நாட்டை நாம் காப்பாற்ற முடியும். இந்நோயை ஒழிக்க முடியும் என நாம் நம்புகிறோம். முதல் மற்றும் இரண்டாம் கொவிட் அலைகளில் எங்களால் அதைச் செய்ய முடிந்தது. மூன்றாம் அலையை அடக்குவது கடினமான பணி அல்ல” என அமைச்சர் மேலும் கூறினார்.
——–
Reported by : Sisil.L