வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் சோதனை

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு
அனுப்பப்பட்டே, அதற்குரிய முடிவுகள் பெறப்பட்டு வந்தன.


கடந்த ஓகஸ்ட் மாதமளவில் மத்திய அரசினால் வவுனியா வைத்தியசாலைக்கு 35 மில்லியன் ரூபா பெறுமதியான பி.சி.ஆர் ஆய்வுகூடத் தொகுதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
———————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *