நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் வெளிநாடு செல்வதற்காக, வவுனியா புகையிரத நிலையம் அருகில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் முன்பாக, நள்ளிரவு 12 மணியிலிருந்து வரிசையில் இடம் பிடிப்பதற்காக இளைஞர்,யுவதிகள் காத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
மட்டக்களப்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற பல பிரதேசங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கில் இளைஞர்,யுவதிகள் படையெடுத்து வந்துள்ளனர்.
இதேவேளை கொழும்பிலுள்ள பிரதான குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நோக்கியும் பெருமளவு இளையோர் கடவுச்சீட்டை பெறும் நோக்கில் வருகை தருவதாக கூறப்படுகிறது.
————
Reported by:Anthonippillai.R