மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள நீர்நிலைகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேசிய மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 155 அடியிலிருந்து 84 அடியாக நேற்று காலை (01) 6 மணியளவில் குறைந்துள்ளதாகவும், மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 120 அடியில் இருந்து 66.5 அடியாகவும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
நீர் மட்டம் குறைவதால், இந்த நீர்த்தேக்கங்களைக் கட்டும் போது நீரில் மூழ்கிய பல இடிபாடுகள் மீண்டும் வெளிவருகின்றன.
விமலசுரேந்திர, லக்ஷபான, நவ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய நீர் மின் நிலையங்கள் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து வருவதாக நீர்மின் நிலையப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
————–
Reported by : Sisil.L