வடமராட்சியில் நேற்றும் இரு சடலங்கள் கரையொதுங்கின

வடமராட்சி கடற்பரப்பில் நேற்றும் இரு சடலங்கள் கரையொதுங்கின. கடந்த 6 நாட்களில் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய ஆறாவது சடலம் இதுவாகும்.தொடர்ச்சியாக வடமராட்சியில் கரையொதுங்கிய 5ஆவது சடலம் இதுவாகும். இதனால், அந்தப் பகுதி கரையோர மக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

 
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் ஒரு சடலம் கணட்றியப்பட்டது. இதேபோன்று, வடமராட்சி கிழக்கு – சுண்டிக்குளம்- பூனைத்தொடுவாய் பகுதியில் நேற்று மாலை ஒரு சடலம் கரையொதுங்கியது.

 
கரையொதுங்கிய இந்தச் சடலங்கள் பல நாட்கள் கடலில் கிடந்தமையால் சற்று உருக்குலைந்துள்ளன. இவற்றை மீட்டுள்ள பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர். இதேவேளை, கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறையிலுமாக இரு சடலங்கள் மீட்கப்பட்டன. மறுநாள் ஞாயிற் றுக்கிழமை நெடுந்தீவில் சடலம் ஒன்று கரையொதுங்கியது. 

 

இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியிலும் ;ஒரு சடலம் கரையொதுங்கியது என்பது குறிப் பிடத்தக்கது.               

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *