வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று(06) பயணிக்கவிருந்த மற்றுமொரு ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று(06) பயணிக்கவிருந்த மற்றுமொரு ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ் தேவி ரயில், பூனாவை பகுதியில் நேற்று(05) தடம் புரண்டதை அடுத்து வடக்கு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நேற்று(05) வடக்கு மார்க்கத்தில் பயணிக்கவிருந்த இரு தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.

தடம் புரண்ட ரயில் இதுவரை தண்டவாளத்தில் நிறுத்தப்படவில்லை என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய(06) தினத்திற்குள் யாழ் தேவி ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மஹவ தொடக்கம் வவுனியா வரையான ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டு சுமார் 150 வருடங்கள் ஆகின்ற நிலையில், இதுவரை குறித்த பாதை புனரமைக்கப்படவில்லை என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரு கட்டங்களாக குறித்த ரயில் பாதையை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மஹவ மற்றும் வவுனியாவுக்கிடையிலான ரயில் பாதையானது 128 கிலோமீட்டர் தூரத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *