வடக்கில் ரேபிஸ் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு; செல்லப் பிராணிகளிடத்தில் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

கடுமையான மருந்து தட்டுப்பாடு வடக்கிலுள்ள வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தெரு நாய்கள் மற்றும் வீட்டுச் செல்லப்பிராணிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடமாகாண பொதுச் சுகாதார அதிகாரிகள் வடமாகாண மக்களை வலியுறுத்தியுள்ளனர்.


நாய்கள் மற்றும் பூனைகளின் கடி மற்றும் சுரண்டலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடிய ரேபிஸ் தடுப்பூசிகள் உட்பட மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.


இதன் காரணமாக, மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இயன்றவரை தடுப்பூசி போடவும், செல்லப்பிராணிகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முன்னெப்போதையும் விட கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இதேவேளை, யாழ்.மாவட்டம் உட்பட வடக்கின் பல ஆதார வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், உரிய மருந்துகளை மருந்தகங்கள் ஊடாகப்  பெற்றுக்கொள்வதில் அதிக செலவு ஏற்பட்டு மக்கள் பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
————
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *