வடக்கில் நேற்று 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட யாழ்ப்பாணத்தில் 48 பேர் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 850 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 66 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 18 பேர், சங்கானையில் 16 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் 5 பேர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் என யாழ். மாவட்டத்தில் 48 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோன்று மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் 5 பேருக்கும் முசலி மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குமாக 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோல், பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும்,வவுனியா சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையில் நால்வரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.                                                  
——————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *