வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 22 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தின் பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது. இதன்படி, நேற்று யாழ்ப்பாணத்தில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேரும், யாழ். போதனா மருத்துவமனையில் 2 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேரும், புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதேபோல, மன்னார் பொது மருத்துவமனையில் மூவரும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இருவரும், வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவரும், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருமாக வடக்கு மாகாணத்தில் நேற்று மொத்தம் 22 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதுதவிர, நேற்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேரும், மூதூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும், இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் 13 பேரும், வசாவிளான் தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
——————–
Reported by : Sisil.L