வடக்கு மாகாணத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட் டது. யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது.
நேற்றைய தினம் ஆய்வு கூடத்தில் 155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, யாழ். போதனா மருத்துவமனையில் 3 பேருக் கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச மருத் துவமனையில் ஒருவருக்கும் என யாழ். மாவட்டத்தில் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் 3 பேருக்கும், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒரு வருக்கும், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
——————–
Reported by : Sisil.L