உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L