ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பின்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போருக்கு எதிராக வசனங்கள் எழுதிய பதாகையைக் காட்டியுள்ளார்.
இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிறுவனத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து வந்த மெரினா ஓவ்சியானிகோவா(Marina Ovsyannikova) என்பவரே குறித்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது தொடர்பில் மெரினா ஓவ்சியானிகோவா மீது வழக்கு தொடரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையின் முடிவில் அவருக்கு 30,000 ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு குறித்த அபராதம் மட்டும் தான் விதிக்கப் படுமா, இல்லையேல் வேறு ஏதேனும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவாரா என இற்றை வரை தெரியவில்லை.
——————
Reported by : Sisil.L