ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய அணி வகுப்புகள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடம் மரியுபோலை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைன் படைகள் இன்று சரணடையாவிட்டால் விளைவு வேறு விதமாக இருக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அதே சமயம், உக்ரைன் படைகள் தங்களுக்கு உதவ புதிய படைகளை அனுப்பும்படி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
அதேசமயம் இந்தப் போரில் ரஷ்யா தனது 25 சதவீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறது. இந்தச் சமயத்தில் உக்ரைனுக்கு நாங்கள் ஆயுத தளபாடங்களை உதவிக்கு அனுப்புவோம் எனக் கூறியுள்ளது.
Reported by : Sisil.L