ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடை விதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ரஷ்யா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய விநியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம்.
ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும். இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.
————————-
Reported by : Sisil.L