இலங்கையின் கீழ் மற்றும் மத்திய பகுதியில் விளையும் தேயிலை ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், இலங்கையின் தேயிலைத் தொழிலில் யுத்தம் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அல்லது பிரித்தானியா ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் ரஷ்யா அல்லது வேறு நாடுகளுடனான வர்த்தகத்தை இலங்கை நிறுத்தக் கூடாது எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக அடுத்த பத்து வருடங்களுக்குள் ஆசியா உலக வல்லரசாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
——————–
Reported by : Sisil.L